பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் இந்தியா முதன்மை நாடாக மாறும் - பெட்ரோலிய மந்திரி

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் இந்தியா முதன்மை நாடாக மாறும் என்று பெட்ரோலிய மந்திரி ஹர்தீப்சிங் பூரி உறுதியளித்துள்ளார்.

Update: 2022-05-23 19:04 GMT

Image Courtesy: PTI

டாவோஸ்,

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக வர்த்தக கூட்டமைப்பின் வருடாந்திர கூட்டத்தில், இந்தியாவின் சி.ஐ.ஐ. ஏற்பாடு செய்த அமர்வு நடைபெற்றது. அதில், இந்திய பெட்ரோலியத்துறை மந்திரி ஹர்தீப்சிங் பூரி பங்கேற்றார். அவர் பேசியதாவது:-

இந்தியாவில், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, மாற்று ஆதாரத்தில் இருந்து உயிரி எரிபொருள் உற்பத்தி, உயிரி எரிபொருள் கலப்பு ஆகியவற்றுக்கு மற்ற நாடுகளை விட சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பதற்கான இலக்கு, 2030-ம் ஆண்டில் இருந்து 2025-ம் ஆண்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. நிச்சயமாக இதை எட்ட முடியும்.

பசுமை ஹைட்ரஜன் உற்பத்தியில் உலகத்திலேயே முதன்மை நாடாக இந்தியா உருவெடுக்கும். கொரோனா தாக்கிய பிறகு மோடி அரசு எடுத்த மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று, தடுப்பூசி உற்பத்தியை முன்எப்போதும் இல்லாத வேகத்தில் செய்ததுதான் என்று அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்