தென் கொரியாவுடன் 50 ஆண்டு தூதரக உறவு..!! பிரதமர் மோடி புகழாரம்

உறவை மேலும் விரிவுபடுத்த தென்கொரிய அதிபருடன் இணைந்து செயல்பட ஆர்வமாக இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Update: 2023-12-10 19:14 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

தென் கொரியாவுடன் இந்தியாவின் தூதரக உறவு தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த சூழலில் தென்கொரிய அதிபர் யூன் சுக் யோலுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த பிரதமர் மோடி, இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு கூட்டாண்மையை ஆழப்படுத்தவும், விரிவுபடுத்தவும் அவருடன் நெருக்கமாகப் பணியாற்ற எதிர்பார்த்திருப்பதாக கூறினார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி நேற்று தனது எக்ஸ் சமூக வலைத்தள பக்கத்தில், "இந்தியா-தென்கொரியா தூதரக உறவின் 50-வது ஆண்டு விழாவை இன்று கொண்டாடி வருகிறோம். இது, பரஸ்பர மரியாதை, பண்பாட்டு பகிர்வு, வளரும் கூட்டு பங்களிப்பு ஆகியவை கொண்ட பயணம் ஆகும். இந்த உறவை மேலும் விரிவுபடுத்த தென்கொரிய அதிபருடன் இணைந்து செயல்பட ஆர்வமாக இருக்கிறேன்" என்று அவர் தெரிவித்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்