பெண்களின் இலவச பயண திட்டத்திற்கு எதிராக வழக்கு: மனுதாரர் மீது அதிருப்தியை வெளிப்படுத்திய ஐகோர்ட்டு

பெண்களின் இலவச பயண திட்டத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த மனுதாரர் மீது அதிருப்தியை கர்நாடக ஐகோர்ட்டு வெளிப்படுத்தி உள்ளது.

Update: 2023-09-01 18:45 GMT

பெங்களூரு:

அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்வதற்கான சக்தி திட்டத்தை கர்நாடக அரசு தொடங்கி வைத்தது. அதன்பேரில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு எதிராக கர்நாடக ஐகோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் 'சக்தி' திட்டத்தால் பொதுமக்களுக்கு தொந்தரவு ஏற்படுவதாகவும், அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அந்த திட்டத்தை ரத்து செய்யுமாறும் கோரப்பட்டது.

அந்த மனு மீது தலைமை நீதிபதி பி.பி.வரலே, நீதிபதி கமல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணையின்போது நீதிபதிகள், 'சக்தி திட்டம் குறித்து நீங்கள் (மனுதாரர்) ஆய்வு நடத்தினீர்களா?, ஏழை மக்களுக்கு இந்த திட்டம் பயன் அளிக்கிறதா? இல்லையா?. இந்த திட்டத்தால் பஸ்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறதா?. பொது போக்குவரத்து பஸ்களில் இத்தனை பேர் தான் பயணிக்க வேண்டும் என்று ஏதாவது விதிகள் உள்ளதா?. இந்த மனுவை வாபஸ் பெற உங்களுக்கு அனுமதி அளிக்கிறோம்' என்று கூறி நீதிபதிகள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்