காஷ்மீர் என்கவுண்ட்டர்; 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை

ஜம்மு மற்றும் காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர்.

Update: 2022-07-11 08:17 GMT



ஜம்மு,



ஜம்மு மற்றும் காஷ்மீரின் அவந்திபோரா பகுதியில் வந்தக்போரா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலை தொடர்ந்து பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில், பதுங்கி இருந்து பயங்கரவாதிகளுக்கும், படையினருக்கும் இடையே இன்று கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த என்கவுண்ட்டரில் முதலில் ஒரு பயங்கரவாதி சுட்டு கொல்லப்பட்டார் என தகவல் வெளியானது.

இந்நிலையில், மற்றொரு பயங்கரவாதியும் சுட்டு கொல்லப்பட்டார். இதனால், மொத்தம் 2 பயங்கரவாதிகள் இதுவரை சுட்டு கொல்லப்பட்டு உள்ளனர். தொடர்ந்து பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என காஷ்மீர் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்