கேரளா பயங்கரவாதத்தின் மையமாக மாறியுள்ளது - ஜே.பி.நட்டா குற்றச்சாட்டு

கேரளா, பயங்கரவாதம் மற்றும் விளிம்புநிலை கூறுகளின் மையமாக மாறி வருகிறது என பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.

Update: 2022-09-26 17:21 GMT

திருவனந்தபுரம்,

பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தைக்காட்டில் பாஜக மாவட்ட அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, "பா.ஜ.க நன்கு கட்டமைக்கப்பட்ட, தொண்டர்கள் அடிப்படையிலான கட்சி ஆகும். இதனால் அதன் சித்தாந்தத்தில் உறுதியாக உள்ளது.

கேரளா, பயங்கரவாதம் மற்றும் விளிம்புநிலை கூறுகளின் மையமாக மாறி வருகிறது. இங்கு பாதுகாப்பாக வாழ முடியாது. இங்கு வாழும் பொதுமக்கள் அச்சத்துடனே வாழ்ந்து வருகிறார்கள்.

கேரளாவில் வகுப்புவாத பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. வன்முறையாளர்களுக்கு இடதுசாரி அரசாங்கம் மறைமுகமான ஆதரவு அளித்து வருகிறது." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்