இந்தியாவுக்கான இலங்கையின் புதிய தூதராக சேனுகா திரேனி நியமனம்

இந்தியாவில் தனது தூதரக பணிகளை தொடங்கும் முன், ஜனாதிபதி திரவுபதி முர்முவை சேனுகா திரேனி சந்தித்தார்.;

Update:2024-01-07 18:43 IST

Image Courtesy : @rashtrapatibhvn

புதுடெல்லி,

இந்தியாவுக்கான இலங்கை தூதராக, இலங்கை வெளிவிவகார அமைச்சரவையின் முன்னாள் செயலாளரான, சேனுகா திரேனி செனவிரத்னே நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்தியாவில் தனது தூதரக பணிகளை தொடங்கும் முன், இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்முவை சேனுகா திரேனி சந்தித்தார்.

இதுகுறித்து 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டுள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு, சேனுகா திரேனி நற்சான்றிதழ்களை ஒப்படைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். சேனுகா திரேனி, ஐ.நா. சபையில் இலங்கை பிரதிநிதியாகவும், இங்கிலாந்துக்கான தூதராகவும், தாய்லாந்து நாட்டின் தூதுவராகவும் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்