மண்சரிவை அகற்ற வேண்டும்; சிக்கமகளூரு துணை கலெக்டரிடம், கிராம மக்கள் மனு

சாலையில் ஏற்பட்டுள்ள மண்சரிவை அகற்ற வேண்டும் எனக்கூறி சிக்கமகளூரு துணை கலெக்டரிடம், கிராம மக்கள் மனு கொடுத்தனர்.

Update: 2022-07-21 15:17 GMT

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு தாலுகா கொலகாமே மற்றும் ஜாக்ரா கிராமத்தை சோ்ந்த சிலர், கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று துணை கலெக்டர் ரூபாவை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

கொலகாமே, ஜாக்ரா கிராமங்களில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பெய்த கனமழைக்கு அப்பகுதியில் உள்ள சாலையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் 50 கி.மீ. தூரம் வரை சுற்றி சென்றுவர வேண்டியுள்ளது. எனவே, பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு உடனடியாக சாலையில் ஏற்பட்ட மண்சரிவு அகற்றி போக்குவரத்துக்கு வழி வகுத்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடபட்டிருந்தது. இந்த மனுவை பெற்றுகொண்ட துணை கலெக்டர் ரூபா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்