கணிதம், அறிவியல் பாடங்களை மதராசாக்கள் கற்றுக்கொடுக்கின்றன - அசாதுதீன் ஓவைசி

மதராசாக்களை சேர்ந்தவர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக போராடினர் என்று அசாதுதீன் ஓவைசி தெரிவித்துள்ளார்.

Update: 2022-05-24 12:55 GMT

ஐதராபாத்,

இஸ்லாமிய மதத்தை சேர்ந்த குழந்தைகள் தங்கள் மத போதனைகளை கற்றுக்கொள்ள ஏற்படுத்தப்பட்ட மதரீதியிலான கல்வியியல் அமைப்பே 'மதராசா' ஆகும். பல்வேறு மாநிலங்களில் மதராசாக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிதி வழங்கி வருகின்றன.

இதற்கிடையில், மதராசாக்களை நீக்கிவிட்டு அவற்றை பொதுவான பள்ளிக்கூடங்களாக மாற்ற அசாம் அரசு முடிவு உத்தரவிட்டுள்ளது. அசாம் மாநிலத்தில் அரசு நிதியுடன் மொத்தம் 740 மதராசாக்கள் இயங்கி வரும் நிலையில் அந்த மதராசாக்களை பொதுவான பள்ளிக்கூடங்களாக மாற்ற அம்மாநில முதல்-மந்திரி உத்தரவிட்டுள்ளார். மேலும், மதராசாக்கள் என்ற வார்த்தையை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமெனவும் முதல்-மந்திரி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அனைத்து இந்திய மஜ்லிக் இ இதிஹாத் உல் முஸ்லிமின் (எஐஎம்ஐஎம்) கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஓவைசி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அசாமில் வெள்ளத்தால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால், அம்மாநில முதல்-மந்திரியோ மதராசாக்கள் குறித்து கவலைகொள்கிறார். மதராசாக்களை சேர்ந்தவர்கள் பிரிட்டிஷாருக்கு எதிராக போராடினர். அறிவியல், கணிதம் மற்றும் பிற பாடங்களை மதராச்சாக்கள் கற்றுக்கொடுக்கின்றன. இஸ்லாமிய மதம், இஸ்லாமியர்கள் மீது பாஜக வெறுப்புணர்வு கொண்டுள்ளது' என தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்க... 'மதராசா' என்ற வார்த்தையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்; அசாம் முதல்-மந்திரி பேச்சு

Tags:    

மேலும் செய்திகள்