மராட்டியம்: சமூக ஊடக பதிவால் ஷிண்டே, உத்தவ் தாக்கரே தரப்பினர் மோதல்; 30 பேர் மீது வழக்கு

மராட்டியத்தில் சமூக ஊடக பதிவால் ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே தரப்பினர் இடையே நடந்த மோதலில் உத்தவ் தரப்பில் 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Update: 2022-09-11 08:27 GMT



புனே,



மராட்டியத்தில் சிவசேனாவில் இருந்து தனித்து பிரிந்து சென்ற எம்.எல்.ஏ.க்கள் மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இயங்கினர். பின்னர் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பதவி விலகியதும், பா.ஜ.க. ஆதரவுடன் ஏக்நாத் ஷிண்டே மராட்டிய முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார்.

முன்னாள் முதல்-மந்திரியான பா.ஜ.க.வின் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்-மந்திரியானார். எனினும், தங்களை உண்மையான சிவசேனா அணி என அறிவிக்க கோரி இரு தரப்பினரும் வழக்கு தொடுத்து உள்ளனர். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், சமூக ஊடகத்தில் வெளியிட்ட பதிவு ஒன்றிற்காக ஏக்நாத் ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது. தாதர் பகுதியில் இரு தரப்பினரும் கைகலப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

இதனை தொடர்ந்து தகவல் அறிந்து, சம்பவ பகுதிக்கு சென்ற போலீசார் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். உத்தவ் தாக்கரே தரப்பில் இருந்து 5 பேரை கைது செய்து அழைத்து சென்றுள்ளனர். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்