பெங்களூருவில் முகக்கவசத்திற்காக அபராதம் விதிப்பது மீண்டும் கொண்டுவரப்படலாம்: சுகாதாரத்துறை மந்திரி

பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது.

Update: 2022-07-14 18:07 GMT

கோப்புப்படம்

பெங்களூரு,

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் ஒருநாள் பாதிப்பு 1,231 ஆக அதிகரித்து உள்ளது. இந்த நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிப்பது குறித்து கர்நாடக அரசு ஆலோசித்து வருகிறது.

இது குறித்து கர்நாடக சுகாதாரத்துறை மந்திரி கே சுதாகர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "குறைந்தபட்சம் பெங்களூருவிலாவது முகமூடிகள் கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இதுவரை அபராதம் விதிக்கப்படவில்லை. மக்கள் மீது அபராதம் விதிப்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டி உள்ளது. நிலைமை கையை மீறுவதற்கு முன்னரே இதுபற்றி விவாதிக்க வேண்டும்.

முகக்கவசம் அணியாதவர்களிடம் இருந்து அபராதம் விதிப்பது குறித்து இறுதியில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மையுடன் விவாதிப்போம்" இவ்வாறு சுகாதாரத்துறை மந்திரி கே சுதாகர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்