சொத்தில் பங்கு இல்லை: தந்தை, 2 சகோதரிகள் படுகொலை; மகன் தப்பியோட்டம்
உத்தர பிரதேசத்தில் சொத்தில் பங்கு இல்லை என்ற ஆத்திரத்தில் தந்தை மற்றும் 2 சகோதரிகளை படுகொலை செய்து விட்டு மகன் தப்பியோடி விட்டார்.;
பாக்பத்,
உத்தர பிரதேசத்தில் பாக்பத் மாவட்டத்தில் வசித்து வந்தவர் பிரிஜ்பால் (வயது 60). இவரது மனைவி சசிபிரபா. இந்த தம்பதிக்கு அமர் என்ற லக்ஷ் என்ற பெயரிலான மகனும், ஜோதி (வயது 25) மற்றும் அனுராதா (வயது 17) ஆகிய 2 மகள்கள் இருந்தனர்.
இந்நிலையில், பிரிஜ்பால் தனது மகன் அமரிடம் சொத்தில் பங்கு கிடையாது என கூறியுள்ளார். 2 மாதங்களுக்கு முன்பு சொத்தில் இருந்து அமரின் பெயரை நீக்கியதுடன், அவருக்கான உரிமையையும் நீக்கி விட்டார்.
இதனால், அமர் ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்நிலையில், தனது தந்தை மற்றும் 2 சகோதரிகளை படுகொலை செய்து விட்டு அமர் தப்பியோடி விட்டார். இதுபற்றி அமரின் தாயார் சசி பிரபா போலீசுக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
உடனடியாக போலீசார் சென்று 3 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.