ஒடிசா பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற பிப்ரவரி 21-ந்தேதி தொடக்கம்

ஒடிசா சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற பிப்ரவரி 21-ந்தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-02-02 13:28 GMT

புவனேஸ்வர்,

ஒடிசா மாநில சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற பிப்ரவரி 21-ந்தேதி தொடங்கும் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக ஒடிசா கவர்னர் கணேஷி லால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஒடிசா மாநிலத்தின் 16-வது சட்டப்பேரவையின் 12-வது பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற பிப்ரவரி 21-ந்தேதி காலை 11 மணிக்கு புவனேஸ்வரில் உள்ள சட்டமன்ற கட்டிடத்தில் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வருகிற ஏப்ரல் 6-ம்தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் பிப்ரவரி 24-ம்தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்