பிரதமர் மோடி மதத்தை வைத்து அரசியல் செய்ததே கிடையாது: மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கிரேட்டர் நொய்டாவில் வாக்கு சேகரித்தார்

Update: 2024-04-24 09:43 GMT

நொய்டா,

நாடாளுமன்ற தேர்தல் வாக்கு சேகரிப்பு பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாராவில் நடைபெற்ற பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, நாட்டின் வளங்கள் முதலில் சிறுபான்மையினர் குறிப்பாக இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கடந்த 2006 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாக தெரிவித்தார். பிரதமர் மோடியின் கருத்துக்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. மேலும், அவர் மதத்தின் பேரில் அரசியல் செய்வதாக எதிர்கட்சிகள் சார்பில் குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் , மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் கிரேட்டர் நொய்டாவில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது, பொது மக்களிடையே பேசிய அவர் ,

சகோதர சகோதரிகளே பிரதமரை எனக்கு இப்போது தான் தெரியும் என்றே இல்லை. நீண்ட காலம் அவருடன் எனக்கு நல்ல தொடர்பு இருந்து வருகிறது. அவர் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் என மதத்தின் பேரில் எப்போதும் அரசியல் செய்ததே இல்லை. நமது பிரதமர் சமூகத்தை பிளவுபடுத்த ஒருபோதும் நினைத்ததே இல்லை.என்று தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்