ராமர் கோவில் கட்டியதன் மூலம் அடுத்த 1,000 ஆண்டுகளுக்கான 'ராம ராஜ்யம்' நிலைநிறுத்தப்பட்டது - பா.ஜனதா தீர்மானம்

ராம ராஜ்யம் என்பது உண்மையான ஜனநாயகத்துக்கான அடையாளம் என்று பா.ஜனதா தேசிய கவுன்சில் கூட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Update: 2024-02-18 21:24 GMT

புதுடெல்லி,

பா.ஜனதா தேசிய கவுன்சில் கூட்டத்தில் அயோத்தி ராமர் கோவில் குறித்து ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாவது:-

பண்டைய புனித நகரமான அயோத்தியில் ராமருக்கு அவர் பிறந்த இடத்தில் கோவில் கட்டியது, வரலாற்று சிறப்புமிக்க சாதனை. அடுத்த 1,000 ஆண்டுகளுக்கான 'ராம ராஜ்யம்' நிறுவப்பட்டதை இது உணர்த்துகிறது. ராமர் கோவிலுக்கு வெற்றிகரமாக கும்பாபிஷேகம் நடத்திய பிரதமரின் தலைமையை பா.ஜனதா இதயபூர்வமாக வாழ்த்துகிறது.

இந்தியாவின் தொலைநோக்கு பார்வை, தத்துவம், பாதை ஆகியவற்றின் அடையாளமாக ராமர் கோவில் திகழ்கிறது. தேசிய உணர்வுக்கான கோவிலாக ஆகிவிட்டது. கும்பாபிஷேகத்தை தொலைக்காட்சியில் கண்ட ஒவ்வொரு இந்தியனும் மகிழ்ச்சி அடைந்துள்ளான். 'ராம ராஜ்யம்' என்ற கருத்து, மகாத்மா காந்தியின் மனதிலும் இருந்தது. 'ராம ராஜ்யம்' என்பது உண்மையான ஜனநாயகத்துக்கான அடையாளம். அதை நல்லாட்சிக்கான உதாரணமாக பிரதமர் மோடி பின்பற்றி வருகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்