ஜெய்சால்மரில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் விபத்து

விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை கோர்ட்டு அமைக்கப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

Update: 2024-04-25 07:15 GMT

ஜெய்சால்மர்,

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் மாவட்டத்தில் உள்ள பிதாலா கிராமத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஆளில்லா விமானம் இன்று வழக்கமான பயிற்சியை மேற்கொண்டது. அப்போது திடீரென அந்த விமானம் பிதாலா கிராமத்தில் விழுந்து நொறுங்கியது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த விமானப்படை அதிகாரிகள், விபத்திற்குள்ளான ஆளில்லா விமானத்தின் பாகங்களை பத்திரமாக மீட்டு சோதனை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து இந்திய விமானப்படை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், "இந்திய விமானப்படையின் ஆளில்லா விமானம் ஒன்று இன்று ஜெய்சால்மர் அருகே வழக்கமான பயிற்சியின்போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் எந்த வித பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்படவில்லை. விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை கோர்ட்டு அமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்