பிரதமர் மோடியுடன் சுமலதா எம்.பி. சந்திப்பு; மகனின் திருமண அழைப்பிதழ் கொடுத்தார்

பிரதமர் மோடியை சந்தித்த சுமலதா எம்.பி. சந்திப்பு மகனின் திருமண அழைப்பிதழ் கொடுத்தார்.;

Update:2023-04-06 02:18 IST

மண்டியா:

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் 10-ந்தேதி தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிப்பதாக நடிகை சுமலதா அம்பரீஷ் எம்.பி. அறிவித்துள்ளார். அவரது மகனும், நடிகருமான அபிஷேக்கிற்கு வருகிற ஜூன் மாதம் திருமணம் நடைபெற உள்ளது. கடந்த டிசம்பர் மாதம் அபிஷேக்கிற்கும், அவிவா பிதபா என்பவருக்கும் திருமண நிச்சயார்த்தம் நடந்திருந்தது. இந்த நிலையில் சுமலதா எம்.பி. நேற்று டெல்லியில் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர், மகனின் திருமணத்தில் கலந்துகொள்ளும்படி பிரதமர் மோடிக்கு அழைப்பிதழ் கொடுத்தார். அவருடன் அபிஷேக்கும் இருந்தார். இதுதொடர்பான புகைப்படத்தை நடிகர் அபிஷேக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்