இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் குடும்பத்தினர் கோவாவில் விடுமுறை கொண்டாட்டம்

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் குடும்பத்தினர் விடுமுறை கொண்டாட்டத்திற்காக கோவா வந்துள்ளனர்.;

Update:2023-02-16 00:55 IST

பனாஜி,

இங்கிலாந்தின் பிரதமராக இந்தியாவை பூர்விகமாக கொண்ட ரிஷி சுனக் பதவியேற்றார். அவரது மனைவி அக்ஷதா சுதா மூர்த்தி தற்போது இங்கிலாந்தின் முதல் குடிமகளாக கவுரவம் பெறுகிறார். தற்போது ரிஷி சுனக்கின் மனைவி, தனது 2 மகள்களுடன் விடுமுறை கொண்டாட்டத்திற்காக கோவா வந்துள்ளனர்.

அவர்கள் தெற்கு கோவாவில் உள்ள பெனாலிம் கடற்கரையில் பொழுதுபோக்கி மகிழ்ந்தனர். அந்த கடற்கரையில் நீர் விளையாட்டு சாகசங்களை நிகழ்த்திக் காட்டும் பிரான்சிஸ் பெர்னாண்டஸ், உள்ளூர் மக்களால் 'பீலே' என்று அழைக்கப்படுகிறார். அவரிடம் நீர் விளையாட்டுகளை பற்றி சுதா மூர்த்தி விசாரிக்க, அவரும் தன்னிடம் பேசுவது இங்கிலாந்து பிரதமரின் மனைவி என்பதை அடையாளம் கண்டார்.

பின்னர் அவர்களை பாதுகாப்பாக படகு பயணம் செய்ய வைத்து மகிழ்வித்தார். வீடியோ பதிவுகளையும் எடுத்து இணையத்தில் பகிர்ந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்