உ.பி.: வாரிய தேர்வில் ஆள் மாறாட்டம்; 11 போலி மாணவர்கள், 2 பள்ளி மேலாளர்கள் மீது வழக்கு

உத்தர பிரதேசத்தில் நடந்த பள்ளி வாரிய தேர்வில் ஆள் மாறாட்டத்தில் ஈடுபட்ட 11 போலி மாணவர்கள் மற்றும் 2 பள்ளி மேலாளர்கள் மீது வழக்கு பதிவானது.;

Update:2023-02-22 14:56 IST



லக்னோ,


உத்தர பிரதேசத்தில் பல்லியா மாவட்டத்தில் நடந்த பள்ளி வாரிய தேர்வில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதனை தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.

இதில், தேர்வு எழுத வேண்டிய மாணவர்களுக்கு பதிலாக போலியா 11 மாணவர்கள், தேர்வு மையத்திற்கு வந்து தேர்வு எழுதியது தெரிய வந்து உள்ளது. இதன்படி, அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய பள்ளி மேலாளர்கள் 2 பேர் மீதும் வழக்கு பதிவானது. தப்பியோடிய அவர்களை தேடி வருகிறோம் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்