மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி : உத்தரகாண்ட் முதல்-மந்திரி அறிவிப்பு

கட்டுமானத்தில் உள்ள சுரங்கப்பாதை மறு ஆய்வு செய்யப்படும் என்று உத்தரகாண்ட் முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி தெரிவித்தார்.

Update: 2023-11-28 18:47 GMT

Image Courtacy: AFP

உத்தரகாசி,

உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதையில் சிக்கிய 41 தொழிலாளர்களும் நேற்று பத்திரமாக மீட்கப்பட்டனர். 17 நாட்களாக போராடி தொழிலாளர்களை மீட்ட மீட்பு குழுக்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில் உத்தரகாண்ட் சுரங்கத்தில் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் தலா ஒரு லட்ச ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி அறிவித்துள்ளார். மேலும் அவர்கள் வீடு செல்லும் வரை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்கான முழுமையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும், கட்டுமானத்தில் உள்ள சுரங்கப்பாதை மறு ஆய்வு செய்யப்படும் என்றும் முதல்-மந்திரி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்