ஆசிய உள்விளையாட்டு அரங்க தடகளம்:3,000 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமணன் தங்கப் பதக்கம்
ஆசிய உள்விளையாட்டு அரங்க தடகளம் போட்டியில் 3,000 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லட்சுமணன் தங்கப் பதக்கம் வென்றார்.
அஷ்காபாத்,
5–வது ஆசிய உள்விளையாட்டு அரங்க தடகளம் மற்றும் தற்காப்பு கலை போட்டி துர்க்மெனிஸ்தானில் நடந்து வருகிறது. இதில் நடந்த ஆண்களுக்கான 3 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீரர் லட்சுமணன் 8 நிமிடம் 02.30 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் தட்டிச்சென்றார். சவுதிஅரேபியா வீரர் தாரிக் அகமது வெள்ளிப்பதக்கமும் (8 நிமிடம் 03.98 வினாடி), ஈரானின் கிஹானி உசேன் வெண்கலப்பதக்கமும் (8 நிமிடம் 07.09 வினாடி) பெற்றனர்.