பத்ம பூஷன் விருதுக்கு பிவி சிந்துவின் பெயரை பரிந்துரைத்தது விளையாட்டுத்துறை அமைச்சகம்

பத்ம பூஷன் விருதுக்கு பிவி சிந்துவின் பெயரை விளையாட்டுத்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

Update: 2017-09-25 05:45 GMT
புதுடெல்லி,

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனையான பிவி சிந்துவுக்கு பத்ம பூஷன் விருது வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் பிவி சிந்துவின் பெயரை பத்ம பூஷன் விருதுக்கு பரிந்துரைத்துள்ளது.

 ரியோ ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப்  போட்டியின் பேட்மிண்டன் பிரிவில் வெள்ளி வென்று இந்தியாவுக்கு பிவி சிந்து பெருமை சேர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 22 வயதான பிவி சிந்து கேல்ரத்னா விருது, பத்ம ஸ்ரீ, அர்ஜூனா ஆகிய விருதுகளை ஏற்கனவே பெற்றுள்ளார். 

மேலும் செய்திகள்