உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி; வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை

உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் ஒரு புள்ளியை தவற விட்டு இந்திய வீராங்கனை வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

Update: 2021-08-18 21:27 GMT
காசியாபாத்,

போலந்து நாட்டின் ரோக்லா நகரில் உலக இளையோர் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்தன.  இதில், இந்தியா சார்பில் கலந்து கொண்ட அணியில் இடம் பிடித்த உத்தர பிரதேசத்தின் காசியாபாத் நகரை சேர்ந்த சாக்ஷி சவுத்ரி வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ஒரு புள்ளியை தவற விட்டது தங்கம் பெற முடியாமல் போனது.  அதற்காக வருத்தப்படுகிறேன்.  வருகிற சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்று என்னுடைய நாட்டின் பெயரை பொறிக்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்