ஆப்பிள் டி.வி, ஐ பாட் புரோ
ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை ஐ பாட் புரோ மாடல் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.;
பிரீமியம் ஸ்மார்ட்போன்கள், கம்ப்யூட்டர், லேப்டாப்களைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் தற்போது அடுத்த தலைமுறை டி.வி.யை தயாரித்து அறிமுகம் செய்துள்ளது. இது 4-கே ரெசல்யூஷனைக் கொண்டது. இதில் ஏ 15 பயனோனிக் சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. வீடியோ கேம் விளையாட மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்ரீ ரிமோட் இத்துடன் அளிக்கப்படுகிறது. இந்த டி.வி.க்கள் 64 ஜி.பி. நினைவகத் திறன் கொண்டவை. இந்தியாவில் விரைவிலேயே இது அறிமுகமாக உள்ளது.
ஆப்பிள் ஐ பாட் புரோ
ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை ஐ பாட் புரோ மாடல் லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. இதில் எம் 2 சிப் பயன்படுத்தப்பட்டுள்ளது. எடுத்துச் செல்ல எளிதான வகையில் சிறப்பான செயல்பாடுகளைக் கொண்டதாக இது உருவாக்கப்பட்டுள்ளது. இது முந்தைய மாடல்களைக் காட்டிலும் 15 சதவீதம் கூடுதல் செயல்திறன் கொண்டது. கிராபிக்ஸ் செயல்பாடுகளில் 35 சதவீதம் கூடுதல் செயல்திறன் உள்ளதால் புகைப்பட கலைஞர்கள், மருத்துவத் துறையைச் சார்ந்தவர்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும். அந்த அளவிற்கு இதில் புகைப்படங்கள் மற்றும் மருத்துவ பதிவுகள் துல்லியமாகத் தெரியும். இத்துடன் ஆப்பிள் பென்சில் உள்ளது. இது அடுத்த கட்டமான செயல்திறன் அனுபவத்தை நிச்சயம் அளிக்கக் கூடியது.
இது 11 அங்குல திரை மற்றும் 12.9 அங்குல திரை, 128 ஜி.பி., 256 ஜி.பி., 512 ஜி.பி. மற்றும் 1 டி.பி., 2 டி.பி. நினைவகம் கொண்டதாக வந்துள்ளது. இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1.13 லட்சம். 11 அங்குல திரையைக் கொண்ட மாடலின் விலை சுமார் ரூ.81,900.