வயர்லெஸ் கேமிங் மவுஸ்
மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் வீடியோகேம் பிரியர்களுக்கென வயர்லெஸ் மவுசை அறிமுகம் செய்துள்ளது.;
வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் இது வந்துள்ளது. எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் இதன் வடிவமைப்பு உள்ளது. இது விநாடிக்கு 650 அங்குல வேகம் பயணிக்கும் திறன் கொண்டது. இதன் விலை சுமார் ரூ.7,499.