பி.எம்.டபிள்யூ. ஐ 7

சொகுசு கார்களைத் தயாரிக்கும் பி.எம்.டபிள்யூ. நிறுவனம் புதிதாக ஐ 7 மாடலில் முழுவதும் பேட்டரியில் செயல்படும் சொகுசு செடான் மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2023-02-02 14:26 IST

நிறுவனத்தின் புத்தாக்க கண்டுபிடிப்பு, மேம்பட்ட வடிவமைப்பு, மிகச் சிறந்த செயல்பாடு ஆகிய அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இது வந்துள்ளது.

இதில் 740 ஐ எம் ஸ்போர்ட் (விலை சுமார் ரூ.1.70 கோடி) மற்றும் ஐ 7 டிரைவ் 60 (விலை சுமார் ரூ.1.95 கோடி) என இரண்டு மாடல்கள் வந்துள்ளன. கிரே, வெள்ளை, கருப்பு, சபையர், நீலம் உள்ளிட்ட நிறங்களில் இது கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் விரும்பினால் இரட்டை வண்ணத்தையும் தேர்வு செய்யலாம். முகப்பு விளக்கு பகுதி இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் மேல்பகுதியில் பகலில் எரியும் விளக்கு (டி.ஆர்.எல்.) உள்ளது. அடுத்து அதிக ஒளி வீசும் எல்.இ.டி. முகப்பு விளக்கு உள்ளது. தானியங்கி கதவுகள், வளைவான டிஸ்பிளே, பெரிய திரை, சொகுசான இருக்கைகள், ஸ்மார்ட்போன் போன்று தொடுதிரை உள்ளிட்ட வசதிகளைக் கொண்டது. பி.எம்.டபிள்யூ. செயலி, டிஜிட்டல் சாவி, அவசர கால அழைப்பு, வாகன நெரிசல் குறித்த தகவல், தொலைதூர சேவை, ஸ்மார்ட்போன் மூலம் பார்க் செய்யும் வசதி மற்றும் அமேசான் பயர் டி.வி. வசதிகளைக் கொண்டது.

இது 381 ஹெச்.பி. திறனையும் 520 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையையும் வெளிப்படுத்தக் கூடியது. இதனால் ஸ்டார்ட் செய்து 5.4 விநாடிகளில் 100 கி.மீ. வேகத்தைத் தொட்டுவிட முடியும். இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கி.மீ. இதில் 8 ஆட்டோமேடிக் ஸ்டெப்ட்ரோனிக் கியர் வசதி உள்ளது. பாதுகாப்பு அம்சமாக இதில் 6 ஏர் பேக்குகள் உள்ளன. பாதுகாப்பு உணர் சென்சார், குழந்தைகளுக்கான ஐ சோபிக்ஸ் இருக்கை வசதி உள்ளிட்ட அம்சங்களும் இதில் உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்