போட் கேமிங் இயர்போன்
ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் போட் நிறுவனம் வீடியோகேம் பிரியர்களுக்கென 121 டி.டபிள்யூ.எஸ். என்ற பெயரிலான வயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.;
இது ஒரு முறை சார்ஜ் செய்தால் 40 மணி நேரம் செயல்படும். புளூடூத் 5.3 இணைப்பு வசதி கொண்டது. இதில் 400 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆர்.ஜி.பி. விளக்கு உள்ளது. இரைச்சலைத் தவிர்க்க இ.என்.எக்ஸ். தொழில்நுட்பம் உடையது. கருப்பு, பச்சை, வெள்ளை நிறங்களில் இது கிடைக்கும். இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,499.