காபி காதலர்கள்
உலகின் எல்லா வகையான காபி வகைகளும் கிடைக்கும்படியான கடையை பெங்களூரு நகரில் திறந்துள்ளனர் பெங்களூரு தம்பதியினர்.;
காபிக்கு உலக அளவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உண்டு. சுவையான காபியை தேடிச் சென்று அருந்துவது இந்தியர்களின் வழக்கம். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான சுவையுடன் காபி கிடைக்கும். அனைத்து சுவையான காபியும் ஒரே இடத்தில் கிடைத்தால்...! அதைவிட காபி பிரியர்களுக்கு கொண்டாட்டத்திற்கு ஈடு வேறு எதுவும் இருக்க முடியாது.
இந்த சிந்தனைக்கு உயிர்கொடுத்திருக்கிறார்கள், பெங்களூரு தம்பதியினர். ஆம்..! ராஜீவ் முஜம்தார் மற்றும் ஷிபானி முரளீதர் இவர்கள் இருவரும் உலகின் எல்லா வகையான காபி வகைகளும் கிடைக்கும்படியான கடையை பெங்களூரு நகரில் திறந்துள்ளனர். ஷிபானி கல்வியாளராகவும், ராஜீவ் கட்டிடவியலாளராகவும் பணியாற்றிய போது காபி மீதான அவர்களது பிரியம் காதலுக்கு அடித்தளமிட்டது.
இது குறித்து ஷிபானி கூறும்போது, ''நாங்கள் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். எங்கள் இருவருக்கும் காபி மீதான நேசம் தான் இந்த காபி கடையை திறக்க வழிவகுத்தது. காபி குறித்து ராஜீவுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கின்றன. அவருடன் பழகுவோரையும் தீவிர காபி பிரியர்களாக மாற்றிவிடுவார்.
இதனால்தான் காபி கடையை தொடங்கியுள்ளோம். எங்களிடம் ஹரியா ஸ்விட்ச் என்ற இயந்திரம் உள்ளது. இந்த இயந்திரத்தைப் பயன்படுத்தி பல்சுவை காபியை தயாரிக்க முடியும். எங்கள் காபி கடை, சமூகத்தை கட்டியெழுப்பும் மற்றும் அறிவைப் பகிர்ந்து கொள்ளும் இடமாக மாறியுள்ளது.
அனைத்து காபி பிரியர்களும் இங்கே ஒன்றுபடுகிறார்கள். யோசனையைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இந்தியாவின் அனைத்து சுவையிலும் காபியை வழங்குவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்" என்றார்.
ராஜீவ் கூறும்போது, "20 ஆண்டுகள் கல்வியாளராக பணியாற்றிய பிறகு, வாழ்க்கையை மாற்றுப் பாதையில் செலுத்த வேண்டும் என்று ஷிபானி விரும்பினார். காபி குறித்து உங்களுக்கு இவ்வளவு விஷயங்கள் தெரிகிறதே? இதை வைத்து என்ன செய்வீர்கள் என்று என்னிடம் அடிக்கடி கேட்பார்.
பின்னர் ஒரு நாள் என்னை அழைத்து 'காபி கடை திறக்கலாமா?' என்று கேட்டாள். அந்த கேள்வி தான் இந்த கபேவை உருவாக்க காரணமாக அமைந்தது. இந்த கடையை வணிக ரீதியாக நாங்கள் தொடங்கவில்லை.
சிறந்த காபி மீதான எங்கள் அன்பை மக்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்பினோம். காபியைப் பற்றி எங்களுக்கு இருந்த அறிவைக் கொண்டு மக்களுக்கு சலிப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.
அதனால் தான், உலகம் முழுவதிலும், குறிப்பாக இந்தியா முழுவதும் உள்ள சுவையான காபி வகைகளை தேர்வு செய்து வழங்குகிறோம். நம் நாட்டில் நடைமுறையில் இருக்கும் காபியின் பல்வேறு சுவையை காட்சிப்படுத்த வேண்டும் என்பது தான் எங்கள் ஆசை. சர்வதேச சந்தையைப் பொறுத்தவரை உடனடி காபிக்குத் தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால், நாங்கள் வறுத்த காபி கொட்டையை மட்டுமே பயன்படுத்துகிறோம்" என்றார்.
20 ஆண்டுகள் கல்வியாளராக பணியாற்றிய பிறகு, வாழ்க்கையில் மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும் என்று ஷிபானி விரும்பினார். காபி குறித்து உங்களுக்கு இவ்வளவு விஷயங்கள் தெரிகிறதே? இதை வைத்து என்ன செய்வீர்கள் என்று என்னிடம் அடிக்கடி கேட்பார்.