தேங்காய் வீடு
மும்பையைச் சேர்ந்த மார்க்கெட்டிங் வல்லுநரான மனிஷ் அத்வானி தேங்காய் ஓடுகளின் மூலம் வீடு கட்டியுள்ளார்.;
தனக்கென ஸ்பெஷலாக வீடு கட்டி வாழ்வது பலரின் லட்சியக்கனவு. அதையே சூழலுக்கு உகந்த பொருளில் பட்ஜெட்டில் கட்டினால் சூப்பர்தானே? மும்பையைச் சேர்ந்த மார்க்கெட்டிங் வல்லுநரான மனிஷ் அத்வானி, மனைவி குப்பையில் போடச்சொல்லிக் கொடுத்த தேங்காய் ஓடுகளில் செடிகளை வளர்த்தார்.
அது திருப்தி தராமல் போக, தேங்காய் ஓடுகளின் மூலம் வீடு கட்டினால் என்ன? என்ற பளீர் ஐடியா தோன்றியது. உடனே தன் நண்பர் ஜெய்நீல் திரிவேதியிடம் அதனைச் சொல்லி, 20 கல்லூரி மாணவர்களின் உதவியுடன் கிடுகிடு வேகத்தில் வீட்டைக் கட்டத் தொடங்கிவிட்டார். நன்கு காயவைத்த தேங்காய் ஓடுகளுடன் களிமண், மூங்கில் சேர்த்து கட்டிய சூழலுக்கு பொருத்தமான வீடு கட்ட ஆன செலவு வெறும் 10 ஆயிரம் ரூபாய்தான்.