பகல் பொழுதில் போஸ்ட்மேன் வேலை : டி-20 நாயகன் ஜோஸ் பட்லர் பற்றிய சுவாரசிய தகவல்கள்...!

விக்கெட் கீப்பிங் என்று வந்துவிட்டால் நம்ம டோனிதான் இவரது ரோல் மாடல்.;

Update:2022-11-19 14:25 IST

இங்கிலாந்து அணிக்கு, 'டி-20' உலக கோப்பையை வென்று கொடுத்திருக்கும், ஜோஸ் பட்லர் பற்றிய சில சுவாரசிய தகவல்கள்:

*13 வயதிற்குட்பட்டோர், 15 மற்றும் 17 வயதிற்குட்பட்டோருக்கான இங்கிலாந்து அணியிலும், ஜோஸ் பட்லர் கலக்கியுள்ளார். அவரது மிகச்சிறப்பான ஆட்டம்தான், அவரை இங்கிலாந்து அணிக்கும் அழைத்து வந்தது.

*டி-20 நாயகனாக அறியப்படும் இவர், ஒருநாள் போட்டியில் 4 சதங்களை அடித்திருக்கிறார்.

*பேட்டிங்கில், தென் ஆப்பிரிக்க அதிரடி வீரர் ஏபி டிவில்லியர்ஸ், இவரது ரோல் மாடல். அதேபோல விக்கெட் கீப்பிங் என்று வந்துவிட்டால், நம்ம டோனிதான், இவரது ரோல் மாடல்.

*கிரிக்கெட் வாழ்க்கையை அவர் தேர்வு செய்யாமல் இருந்திருந்தால், பகல் பொழுதில் 'போஸ்ட்மேன்' வேலை செய்துகொண்டே, மாலை நேரங்களில் கோல்ப் விளையாட திட்டமிட்டிருந்தாராம்.

*1999-ம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகள், இங்கிலாந்தில் நடைபெற்றபோது இவர் பல ஆட்டங்களை நேரில் சென்று ரசித்திருக்கிறார். அதில் இந்தியா-இலங்கை மோதிய ஆட்டத்தின்போது, இலங்கை வீரர் டி சில்வாவிடம் ஆட்டோகிராப் வாங்க விரைந்தபோது பட்லரின் பேனாவை வாங்கி டி சில்வாவும் கையெழுத்து போட்டிருக்கிறார். அதை பட்லரிடம் ஒப்படைக்கும்போது, கூட்டத்தில் தள்ளு முள்ளு நிலவியதால், பேனாவுடன் டி சில்வா அறைக்கு சென்றுவிடவே, பேனாவுடன் சேர்த்து ஆட்டோகிராப் பறிபோனதை நினைத்து, இருநாட்கள் அழுததாக, சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

*இந்திய உணவுகள்தான், ஜோஸ் பட்லருக்கு மிகவும் பிடித்தமான உணவு வகை. குறிப்பாக கடல் உணவுகளை விரும்பி உண்பார்.

Tags:    

மேலும் செய்திகள்