டெல் ஏலியன்வேர் எம் 15 ஆர் 7 லேப்டாப்
மின்னணு சாதனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் டெல் நிறுவனம் புதிதாக ஏலியன்வேர் எம் 15 ஆர் 7 என்ற பெயரிலான அதி நவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது.;
இது 15.6 அங்குல முழு ஹெச்.டி. திரையைக் கொண்டுள்ளது. இதில் ஏ.எம். டிரைஸென் 7 6800 ஹெச் பிராசஸர் உள்ளது. 16 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. நினைவகம் கொண்டது. இதை 1 டி.பி. வரை விரிவாக்கம் செய்யும் வசதி உள்ளது.
இதில் விண்டோஸ் 11 இயங்குதளம் பயன்படுத்தப்பட்டுள்ளது. 2.5 வாட் திறன் கொண்ட 2 ஸ்பீக்கர்கள் மற்றும் ஹெச்.டி. கேமரா மற்றும் இரண்டு மைக்ரோபோன்கள் உள்ளன. விளக்குகள் ஒளிரும் வகையிலான கீ போர்டு இதில் உள்ளது. இதன் எடை 2.69 கி.கி. மட்டுமே. 86 வாட் அவர் பேட்டரி 240 வாட் சார்ஜிங் அடாப்டருடன் வந்துள்ளது. மெக்கபே வைரஸ் பாதுகாப்பு சாப்ட்வேர் ஒரு வருடத்திற்கு இந்த லேப்டாப்புடன் இலவசமாக அளிக்கப்படுகிறது. இதன் விலை சுமார் ரூ.1,59,989.