டிஸ்ஸோ டிரிம்மர்

அழகு சாதனங்கள் சார்ந்த மின்னணு பொருட்களைத் தயாரிக்கும் டிஸ்ஸோ நிறுவனம் புதிதாக டிரிம்மரை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2022-09-02 20:44 IST

மிகவும் கூர்மையான பிளேடு பாதுகாப்பான ஷேவிங்கிற்கு உதவும் வகையிலான வடிவமைப்பு கொண்டது. தொடர்ந்து 4 மணி நேரம் இயங்கும் திறன் கொண்டது.

இதில் 1,300 எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இதை 10 நிமிடம் சார்ஜ் செய்தாலே 15 நிமிடம் பயன்படுத்த முடியும். மேலும் பேட்டரியின் மின் திறனைக் காட்டும் வகையில் எல்.இ.டி. இன்டிகேட்டர் உள்ளது கூடுதல் சிறப்பம்சமாகும். எளிதில் சுத்தம் செய்யும் வகையிலான வடிவமைப்பைக் கொண்டது. யு.எஸ்..பி. டைப் சி சார்ஜிங் வசதி கொண்டது.

இதன் எடை 163 கிராம் என்பதால் கையாள்வதும் எளிது. கருப்பு நிறத்தில் வந்துள்ள இந்த டிரிம்மரின் அறிமுக விலை சுமார் ரூ.999.

Tags:    

மேலும் செய்திகள்