5 செயல்திறன் கொண்ட டிஸோ டிரிம்மர்
மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்யும் டிஸோ நிறுவனம் ஐந்து விதமான செயல்பாடுகளைக் கொண்ட டிரிம்மர் கிட் புரோ மாடலை அறிமுகம் செய்துள்ளது.;
இதன் விற்பனையக விலை சுமார் ரூ.1,499. ஷேவர், டிரிம்மர், நீண்ட முடிக்கான சீப்பு மற்றும் ஐந்துவித செயல்பாடுகளை உள்ளடக்கியதாக இது உள்ளது. மேட் பினிஷில் வந்துள்ளதால் இது மிகச்சிறப்பான தோற்றத்தைக் கொண்டுள்ளது. வெளியூருக்குச் செல்லும்போது எடுத்துச் செல்ல வசதியாக டிராவல் பவுச்சுடன் இது வந்துள்ளது. இதில் உள்ள பிளேடு 420 கிரேடு ஸ்டெயின் லெஸ் ஸ்டீலால் ஆனது. இது வழக்கமான பிளேடை விட 50 சதவீதம் கூர்மையானது.
எளிதில் சூடேறாத வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மிகவும் நுட்பமாக 0.5 மி.மீ. அளவு வரை இதில் டிரிம் செய்ய முடியும். மிகவும் பாதுகாப்பான செயல்பாடுகளைக் கொண்டதாக இந்த டிரிம்மர் வந்துள்ளது.