எல்.ஜி. மைக்ரோவேவ் ஓவன்

மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் கொரியாவைச் சேர்ந்த எல்.ஜி. நிறுவனம் புதிதாக மைக்ரோவேவ் ஓவனை இந்திய வாடிக்கையாளர்களுக்காக தயாரித்து அறிமுகம் செய்துள்ளது.;

Update:2022-10-27 20:18 IST

அழகிய வடிவமைப்பு, சிறந்த செயல்பாடுகளைக் கொண்டதாக இது அறிமுகமாகியுள்ளது. நிலக்கரி மூலம் சமைப்பதைப் போன்று இதில் சமைக்க முடியும். எண்ணெய் சேர்க்காமல் உணவுப் பொருட்களை சமைக்க இது ஏற்றது.

உணவின் சுவை மற்றும் அதன் உண்மை தன்மை மாறாத வகையில் இதில் சமைக்க முடியும். 12 நிமிடத்தில் மிகவும் சுகாதாரமான அதே சமயம் நெடி ஏற்படுத்தாத வகையில் இதில் வெண்ணெய்யிலிருந்து நெய் தயாரிக்க முடியும். மொறுமொறுப்பாக சமைப்பது உள்ளிட்ட பணிகளும் இதில் செய்ய முடியும். இதன் விலை சுமார் ரூ.13,599.

Tags:    

மேலும் செய்திகள்