நின்ஜா கேமிங் இயர்போன்
பயர்போல்ட் நிறுவனம் நின்ஜா கேமிங் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.;
மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாகியுள்ளன. இவற்றின் விலை சுமார் ரூ.899 முதல் ஆரம்பமாகிறது. சுற்றுப்புற இரைச்சலைத் தவிர்க்கும் ஏ.என்.சி. தொழில்நுட்பம் மற்றும் சூப்பர் சிங்க் தொழில்நுட்பம் உள்ளதால் விருப்பமான பாடல் களை மிகத் துல்லியமாகக் கேட்டு மகிழலாம். இதை சார்ஜ் செய்ய யு.எஸ்.பி. சி டைப் வசதி உள்ளது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 6 மணி நேரம் வரை செயல்படும். சார்ஜிங் கேசில் 30 மணி நேரம் செயல்படுவதற்குத் தேவையான மின்சாரம் பேட்டரியில் சேமிக்கப் பட்டிருக்கும். இதன் மேல்பாகம் மேட் பினிஷால் ஆனது. கேமிங் பிரியர்களுக்கென வடிவமைக்கப்பட்டதால் இதில் மைக் வசதியும் உள்ளது.