ரெட்ரகோன் வயர்லெஸ் கீ போர்டு

ரெட்ரகோன் நிறுவனம் கேஸ்டர் கே 631 புரோ என்ற பெயரில் வயர்லெஸ் கீ போர்டை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2022-11-04 20:37 IST

எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் மொத்தம் 68 பொத்தான் களைக் கொண்டதாக சிறியவடிவில் இது உருவாக்கப் பட்டுள்ளது. பார்ப்பதற்கு அழகாகவும், மிகச் சிறந்த செயல் பாட்டைக் கொண்டதாகவும் இது உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் ஆர்.ஜி.பி. விளக்கொளி வசதி உள்ளதால் கீ போர்டை இயக்கும்போது அது அழகாக ஒளிரும். தொடு விரல் அசைவில் செயல்படும் வகையில் மிருதுவான தன்மை கொண்டதாக இருப்பதால் இதை அதிக நேரம் இயக்கினாலும் கை விரல்கள் சோர்வடையாது. இதன் எடை 473 கிராம் மட்டுமே. லேப்டாப் மற்றும் பர்சனல் கம்ப்யூட்டருடன் இதை இணைத்து செயல் படுத்த முடியும். யு.எஸ்.பி. மற்றும் புளூடூத் இணைப்பு வசதி கொண்டது. இதில் உள்ள விளக்கொளியை 20 வண்ணங் களில் உங்களது ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக்கொள்ள முடியும்.

இதன் விலை சுமார் ரூ.5,990.

Tags:    

மேலும் செய்திகள்