சாம்சங் மைக்ரோவேவ் ஓவன்

நுகர்வோர் மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் சாம்சங் நிறுவனம் புதிதாக ஊறுகாய் தயாரிப்பதற்கான மைக்ரோவேவ் ஓவனை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2022-11-04 19:48 IST

இதனால் வீட்டிலேயே இந்த ஓவன் மூலம் சுவை மிகுந்த ஊறுகாய்களைத் தயாரிக்க முடியும். 28 லிட்டர் அளவுள்ள இந்த மைக்ரோவேவ் ஓவனின் விலை சுமார் ரூ.24,990.

இந்தியர்களின் உணவுப் பழக்கங்களில் பிரதானமாக இடம்பெறுவது ஊறுகாய். இதைத் தயாரிப்பதற்கு தனித்துவ மான நுட்பம் தேவை. அதை அறிந்து அதற்கேற்ப தொழில்நுட்ப வசதிகளை இந்த ஓவனில் உருவாக்கியுள்ளது சாம்சங். இதன் மூலம் மாங்காய், எலுமிச்சை, பச்சை மிளகாய், முள்ளங்கி, இஞ்சி, பூண்டு, காலி பிளவர் உள்ளிட்டவற்றில் ஊறுகாய்களை தயாரிக்க முடியும்.

Tags:    

மேலும் செய்திகள்