ஸ்டப்கூல் பவர்பேங்க்
மின்னணு உதிரி பாகங்களைத் தயாரிக்கும் ஸ்டப் கூல் நிறுவனம் 10 ஆயிரம் எம்.ஏ.ஹெச். திறன் கொண்ட பவர்பேங்கை அறிமுகம் செய்துள்ளது.;
வயர்லெஸ் சார்ஜிங் பவர் பேங்காக வந்துள்ளது. இதன் மூலம் சாம்சங்கின் இஸட் சீரிஸ் மடக்கும் வகையிலான ஸ்மார்ட்போன் உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்ய முடியும்.
இதில் சி டைப் போர்ட் உள்ளது. இதன் மூலம் நவீன சாதனங்களையும் சார்ஜ் செய்ய முடியும். ஆண்ட்ராய்டு இயங்குதளத்தைக் கொண்ட ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்டவற்றை சார்ஜ் செய்யலாம். பாதுகாப்புக்கு இதில் பி.ஐ.எஸ். சான்று தரப்பட்டுள்ளது. எடை குறைவாக இருப்பதால் வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்வது எளிது. இதில் லி-பாலிமர் பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதன் விலை சுமார் ரூ.2,990.