டென்டா சி.பி 3 பாதுகாப்பு கேமரா
நெட்வொர்கிங் சாதனங்களைத் தயாரிக்கும் டென்டா நிறுவனம் புதிதாக சி.பி 3 என்ற பெயரிலான செயற்கை நுண்ணறிவுத் திறனில் செயல்படும் கேமராவை அறிமுகம் செய்துள்ளது.;
டென்டா சி.பி 3 பாதுகாப்பு கேமரா காட்சிகளை முழுமையாக ஹெச்.டி. தரத்தில் பதிவு செய்யும். இது 360 டிகிரி கோணத்தில் சுழன்று காட்சிகளை பதிவு செய்யும். மனிதர்கள் நடமாட்டத்தை துல்லியமாகக் கணித்து எச்சரிக்கை செய்யும். இது 2 வழியில் செயல்படும். அதாவது வீட்டுக்கு வெளியில் இருந்து அழைப்பவருக்கு வீட்டினுள் இருந்தபடியே பதில் தர முடியும். இதன் விலை சுமார் ரூ.2,999.