திபெத்தியர்களின் 'அதிசய மரபணு..!'

திபெத்தியர்கள் பெற்றிருக்கும் ஒரு அதிசய மர பணுதான் இதற்குக் காரணம் என்றும், இதுதான் அவர்களது ரத்தத்தை மெலிதாக்கி, ஆக்ஸிஜன் குறைந்த மெல்லிய காற்றை சுவாசித்து வாழ வைக்கிறது என்றும் முந்தைய ஆய்வுகள் சொல்லியுள்ளன.;

Update:2022-10-30 21:07 IST

மலைகளின் உயரம் அதிகரிக்கும்போது, அங்கிருக்கும் ஆக்ஸிஜன் அளவு மிகக் குறைவாகவே இருக்கும். ஆகவே மலையின் உச்சியில் சுவாசிப்பது மிகவும் சிரமமான விஷயமாக இருக்கும். ஆதலால்தான் மலை ஏற்ற சாகசம் செய்யும் வீரர்கள் தங்களுடைய முதுகில், இதர உயிர்காக்கும் பொருட்களுடன் ஆக்ஸிஜன் சிலிண்டர்களையும் சுமந்து கொண்டே ஏறுகிறார்கள்.

ஆனால், இதே போன்று கடல் மட்டத்திலிருந்து வெகு உயரத்தில் இருக்கும் திபெத் போன்ற மலைப் பிரதேசத்தில், அந்நாட்டு மக்களால் எப்படி சாதாரணமாக வாழ முடிகிறது?, அவர்களுக்கு சுவாசிப்பதில் பிரச்சினை ஏற்படாதா? என்பதையெல்லாம் விஞ்ஞானிகள் ஆராய்ந்து அறிந்திருக்கிறார்கள்.

'உலகின் கூரை' என்று வர்ணிக்கப்படும் திபெத் பீடபூமியில், திபெத்தியர்கள் வசிக்கும் வாழிடங்கள் எல்லாமே கடல் மட்டத்திலிருந்து சுமார் 4 கி.மீ உயரத்தில் உள்ளன.

இந்த அளவு உயரமான இடத்தில் மற்ற பகுதியில் வசிக்கும் மனிதர்கள் சென்று வாழ முடியாது. அங்கு காற்றில் ஆக்ஸிஜன் குறைவு என்பதால் மூச்சுத் திணறல், உயர்ந்த இடங்களில் ஏற்படும் உடல்நலக் குறைவு மற்றும் ரத்தக்குழாய் வெடிப்பு போன்ற அபாயங்களை அவர்கள் எதிர்கொள்ள வேண்டிவரும்.

ஆனால் அங்கு வசிக்கும் திபெத்தியர்களுக்கு இந்தப் பிரச்சினைகள் எதுவும் ஏற்படுவதில்லையே, ஏன்?

திபெத்தியர்கள் பெற்றிருக்கும் ஒரு அதிசய மர பணுதான் இதற்குக் காரணம் என்றும், இதுதான் அவர்களது ரத்தத்தை மெலிதாக்கி, ஆக்ஸிஜன் குறைந்த மெல்லிய காற்றை சுவாசித்து வாழ வைக்கிறது என்றும் முந்தைய ஆய்வுகள் சொல்லியுள்ளன.

ஆனால் இந்த சிறப்பு மரபணுவின் ஒரு மிகச்சிறப்பான நீட்சி அவர்களுக்கு உண்மையில், மனித இனத்தின் மிகப் பழைய ஒரு பிரிவிலிருந்து கிடைத்திருக்கிறது என்று இப்போது புதிதாக வந்துள்ள ஆய்வு முடிவுகள் சொல்லுகின்றன.

டெனிசொவன்கள் என்ற மனிதகுலப் பிரிவு சுமார் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்துள்ளது. மனிதர்கள் இந்தப் பிரிவுடன் சேர்ந்ததன் விளைவாக அசாதாரண உயரங்களில் வாழ உதவும் சிறப்பு மரபணுவை திபெத்தியர்கள் பெற்றிருக்கிறார்கள்.

இந்த டெனிசொவன் மனிதப் பிரிவினர் பின்னாட்களில் அழிந்து போய்விட்டார்கள். ஆகையால் இந்த டெனிசொவன்களைப் பற்றி பெரிய அளவில் தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. அவர்களது உடல் பாகங்களிலிருந்து ஒரு விரல் எலும்பின் புதைபடிமம் மட்டும் சைபீரியாவில் உள்ள ஒரு குகையில் கிடைத்தது.

இதை வைத்து கலிபோர்னிய பல் கலைக்கழகத்தில் நடந்த ஆராய்ச்சியில், இதேபோன்ற டெனிசொவன் மரபணுக்கள் முன்பு கருதப்பட்டதற்கு மாறாக, சீனா மற்றும் பாபுவா நியூ கினியா போன்ற நாடுகளில் உள்ள மக்களின் உடல்களிலும் காணப்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.

ஆராய்ச்சிகள் தொடர்கின்றன. சங்கிலி போன்ற இதன் முடிவு இன்னும் பல சங்கதிகளை வெளிச்சத் திற்குக் கொண்டுவரும் என்பது விஞ்ஞானிகளின் நம்பிக்கை!

திபெத்தியர்கள் பெற்றிருக்கும் ஒரு சிறப்பு மரபணுதான் இதற்குக் காரணம் என்றும், இதுதான் அவர்களது ரத்தத்தை மெலிதாக்கி, ஆக்ஸிஜன் குறைந்த மெல்லிய காற்றை வைத்தும் சுவாசித்து வாழ வைக்கிறது

Tags:    

மேலும் செய்திகள்