வீடியோகேம் ஸ்பீக்கர்

ரெட்டிராகன் நிறுவனம் புதிதாக வீடியோகேம் பிரியர்களுக்கென ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ளது.;

Update:2022-10-27 19:36 IST

ஜி.எஸ் 560., ஜி.எஸ் 520. மற்றும் ஜி.எஸ் 510. என்ற பெயரில் இவை அறிமுகமாகியுள்ளன. டெஸ்க்டாப் கம்ப்யூட்டருடன் இணைத்து இதை செயல்படுத்த முடியும். இதில் ஆர்.ஜி.பி. விளக்கொளி இருப்பது சிறப்பம்சமாகும்.

இதில் ஜி.எஸ் 560. மாடல் யு.எஸ்.பி. சவுண்ட் பாராகும். ஸ்பீக்கர்கள் மிகவும் வித்தியாசமான வடிவமைப்பில் வெளிவந்துள்ளன. இவை 3 வாட் திறனை வெளிப்படுத்தும். 560 மாடல் விலை சுமார் ரூ.2,990. 520 மாடல் விலை சுமார் ரூ.2,490. 510 மாடல் விலை சுமார் ரூ.1,990.

Tags:    

மேலும் செய்திகள்