புடவை தேர்வில் பெண்களின் 'செலக்‌ஷன் சைக்காலஜி'

புடவை தேர்வில் பெண்களின் ‘செலக்‌ஷன் சைக்காலஜி’ யுக்தி பெண்ணின் மனம் மற்றொரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்பார்கள்.;

Update:2022-10-25 18:29 IST

தீபாவளிக்கு புடவை வாங்க சகோதரியுடன் ஜவுளிக் கடைக்கு சென்றிருந்தேன். இருவரும் புடவையின் நிறம், டிசைன், விலை என எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து பார்த்துவிட்டு எங்களுக்கு தேவையானவற்றை வாங்கிக்கொண்டு 'பில்' போடுவதற்காக காத்திருந்தோம். நீண்ட நேரமாக ஒரு தம்பதியர் புடவை பிரிவில் நின்றிருந் தனர். அந்த பெண்மணி அங்கிருந்த புடவைகள் எல்லா வற்றையும் கடை ஊழியரை எடுத்து காண்பிக்க சொன்னார். அவரும் சளைக்காமல் ஒவ்வொரு புடவையாக எடுத்து காண்பித்துக்கொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில் மேஜை முழுவதும் புடவை குவிந்துவிட்டது. ஆனால் அந்த பெண்மணி புடவையை தேர்வு செய்த மாதிரி தெரியவில்லை. கடை ஊழியரும் சோர்ந்து போய்விட்டார். அந்த பெண்மணியோ திருப்தியே இல்லாமல் புடவை தேடுதலில் தீவிரம் காட்டினார். அதை பார்த்து கணவரும் விழிபிதுங்கி நின்றார். நேர்த்தியாக அடுக்கிவைக்கப்பட்டிருந்த புடவைகள், மடிப்பு விலகி குவியலாக கிடப்பதை பார்த்து கடை ஊழியரும் கையை பிசைந்து கொண்டிருந்தார்.

அதனை கவனித்த நான் அருகில் சென்று, ஒரு புடவையை கையில் எடுத்தேன். ''இதே மாதிரி டிசைன் கொண்ட வேறு புடவை இருக்கிறதா? நீங்கள் இந்த புடவையை எடுக்கவில்லை என்றால் நான் எடுத்துக்கொள்கிறேன்'' என்றேன்.

நான் அப்படி சொன்னதும்தான் தாமதம், அந்த பெண்மணி, ''இல்லை.. இல்லை... அதை நான் 'செலக்‌ஷன்' செய்து வைத்திருக்கிறேன். அதையே பில் போட்டுடுங்க'' என்றார். எனது செயல்பாட்டை கடை ஊழியரும், அந்த பெண்ணின் கணவரும் புரிந்து கொண்டு என்னை நன்றியுடன் பார்த்ததை அந்த பெண்மணி கவனிக்கவில்லை.

ஒரு பெண்ணின் மனம் மற்றொரு பெண்ணுக்குத்தான் தெரியும் என்பார்கள். அந்த யுக்தியை கையாண்டு அந்த பெண்மணியை திருப்திப்படுத்தியது எங்களுக்கும் சுவாரசியமான அனுபவமாக அமைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்