100 நாள் வேலை திட்ட பணிகள்

ஆலங்குளம் பகுதிகளில் 100 நாள் வேலை திட்ட பணிகளை மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆய்வு செய்தார்.

Update: 2022-06-29 19:04 GMT

ஆலங்குளம்,

ஆலங்குளம் பகுதிகளில் 100 நாள் வேலை திட்ட பணிகளை மாணிக்கம் தாகூர் எம்.பி. ஆய்வு செய்தார்.

100 நாள் வேலை திட்டம்

ஆலங்குளம் அருகே உள்ள கீழாண்மறைநாடு ஊராட்சியில் ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் சீனிவாசன் தலைமையிலும், ஏ.லட்சுமிபுரம் ஊராட்சியில் ஊராட்சி தலைவர் மகேஸ்வரி மகேஸ்வரன் தலைமையிலும் 100 நாள் வேலை திட்டபணிகளை மாணிக்கதாகூர் எம்.பி. ஆய்வு செய்தார்.

வேலை செய்யும் பெண்களுக்கு சம்பளம் முறையாக வழங்கப்படுகிறதா என அவர் பெண்களிடம் கேட்டறிந்தார். அப்போது தங்களுக்கு வழங்கும் சம்பளம் ரூ.220 வாழ்வாதாரத்திற்கு போதுமானதாக இல்லை என்றும், எனவே சம்பளத்தை அதிகரித்து தர வேண்டும் என பெண்கள் எம்.பி.யிடம் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

ஆய்வின் போது வெம்பக்கோட்டை வட்டார வளர்ச்சி அதிகாரி சத்தியமூர்த்தி, கொங்கன்குளம் ஊராட்சி தலைவர் பாலகிருஷ்ணன், விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் ரெங்கசாமி, காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, பவுல்ராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.

விருதுநகர்

விருதுநகர் நகராட்சி 8-வது வார்டு அகமது நகர் பகுதியில் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.3½ லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுர மின் விளக்கினை மாணிக்கம் தாகூர் எம்.பி. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

இந்தநிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் சையது முஸ்தபா கமால், என்ஜினீயர் மணி, கவுன்சிலர் பால்பாண்டி, செல்வரத்தினா, ராஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்