மாங்காடு அருகே மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவன் சாவு

மாங்காடு அருகே கபடி போட்டியை பார்க்க சென்ற 10-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக இறந்தான்.;

Update:2022-06-20 13:37 IST

10-ம் வகுப்பு மாணவன்

மாங்காடு அடுத்த மவுலிவாக்கம், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் ரித்திக் (வயது 15), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மவுலிவாக்கம் பகுதியில் உள்ள அம்பேத்கர் விளையாட்டு மைதானத்தில் கபடி போட்டி நடந்து கொண்டிருந்தது. அதனை பார்க்க ரித்திக் சென்றான்.

மின்சாரம் தாக்கி சாவு

அப்போது அங்கு இருந்த மின்சாரவயரின் மீது எதிர்பாராதவிதமாக கை பட்டதில் மின்சாரம் தாக்கி மயங்கி கீழே விழுந்தான். இதை பார்த்ததும் அங்கு இருந்தவர்கள் ரித்திக்கை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி யில் அனுமதித்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ரித்திக் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ரித்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்