கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2022-08-27 18:16 IST

நீடாமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நெடுஞ்செழியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஒரத்தூர் கோரையாறு மேல்கரை ஆலமரம் அருகில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நீடாமங்கலம் கோரையாறு மேல்கரையை சேர்ந்த குருமூர்த்தி (வயது35), ஒரத்தூர் அம்பலக்கார தெருவை சேர்ந்த விக்னேஷ் (22) ஆகியோர் என்பதும், 100 கிராம் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் குருமூர்த்தி, விக்னேஷ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் போதைப்பொருட்களை கைப்பற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்