உக்கடம்
கோவை பெரிய கடைவீதி போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா உக்கடம் - பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடை அருகே ரோந்து வந்தார்.அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் மொத்தம் 73 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில் அவர்கள் கரும்புக்கடை, சேரன் நகரை சேர்ந்த தம்பி என்ற அக்பர் அலி (வயது 27), குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த ரியாஸ்கான் (23) என்பது தெரியவந்தது. இவர்களிடமிருந்து போதை மாத்திரைகள்,இருசக்கர வாகனம், ரொக்கப் பணம் ரூ.1400 பறிமுதல் செய்யப்பட்டது.