2 நிறுவனங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம்

ெடங்கு கொசுகள் இருந்ததால் 2 நிறுவனங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுத்தது.

Update: 2023-09-19 20:08 GMT


மதுரை மாநகரில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மதுரை மாநகராட்சி சார்பில் 530 டெங்கு தடுப்பு பணியாளர்களை கொண்டு வீடுகள் தோறும் சென்று டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு நோய் பரப்பும் ஏ.டி.எஸ். புழுவானது செயற்கையாக தேங்கியிருக்கும் நல்ல தண்ணீரில் வளரும் கொசுவாகும். பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தங்களது கட்டிடங்களில் கொசுப்புழு வளராத வண்ணம் சுத்தம் செய்து, பழைய டயர்கள், தேங்காய் சிரட்டைகள், ஆட்டுக்கல் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும். மேலும் தண்ணீர் சேமித்து வைக்கும் தொட்டிகளை சுத்தம் செய்து மூடி வைக்க வேண்டும் என பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த வழிமுறைகளை பின்பற்றாதவர்கள் மீது அபராதம் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மதுரை மாநகராட்சி மண்டலம்-5-க்கு உட்பட்ட 72-வது வார்டு பைக்காராவில் உள்ள பகுதிகளில் மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு செய்தனர். அப்போது 2 நிறுவனங்கள் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கைகளை சரியாக மேற்கொள்ளவில்லை. எனவே அந்த நிறுவனங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.20 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இது போன்று தொடர்ந்து சுகாதாரமற்ற முறையில் இருப்பதும், டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருப்பது கண்டறியப்பட்டால் மாநகராட்சி சார்பில் அபராதம் விதிக்கப்படுவதுடன் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நகர்நல அலுவலர் வினோத்குமார் எச்சரித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்