இளம் செஞ்சிலுவை சங்க கவுன்சிலர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம்

இளம் செஞ்சிலுவை சங்க கவுன்சிலர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் நடைபெற்றது.

Update: 2022-07-27 19:58 GMT

பெரம்பலூர் மாவட்ட இளம் செஞ்சிலுவை சங்கத்தின் (ஜூனியர் ரெட் கிராஸ்) கவுன்சிலர்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் குரும்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று தொடங்கியது. இதற்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவழகன் சங்க கொடியேற்றி வைத்தும், இளம் செஞ்சிலுவை சங்கத்தை தோற்றுவித்த ஹென்றி டுனான்டின் உருவ படத்தை திறந்து வைத்து கூறுகையில், மாணவர்களை சேவை மனப்பான்மை, மனித நேயம், நேரம் தவறாமை போன்ற நற்பண்புகளை ஆசிரியர்களே முன்மாதிரியாக இருந்து செயல்பட வேண்டும், என்றார். மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் "நலவாழ்வு" பற்றி விரிவாக பேசினார். பெரம்பலூர் வட்டார போக்குவரத்து அலுவலக மோட்டார் வாகன ஆய்வாளர் கருப்புசாமி வாகன விதிகள் குறித்து பேசினார். இளம் செஞ்சிலுவை சங்க மாவட்ட பொருளாளர் கருணாகரன் ரெட் கிராஸ் அடிப்படை கொள்கைகளையும், இறை வணக்க பாடல், கையொலி பயிற்சி ஆகியவற்றை வழங்கி பயிற்சி அளித்தார். இப்பயிற்சி முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளிலிருந்து 152 கவுன்சிலர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி முகாம் இன்றும் (வியாழக்கிழமை) நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்