பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-10-25 00:00 IST

கரூர் மாவட்டம், தென்னிலை பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. அதன்பேரில் தென்னிலை சப்-இன்ஸ்பெக்டர் பிரியதர்ஷினி அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது முத்தனம் பாளையம் பகுதியில் உள்ள பொதுசாவடியில் பணம் வைத்து சூதாடிய நல்லி கவுண்டன்வலசை சேர்ந்த முருகேசன் (வயது 57), முத்தனம் பாளையத்தை சேர்ந்த துரைசாமி (65) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடமிருந்து சீட்டு கட்டுகள், ரூ.500 ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்