கஞ்சா வைத்திருந்த 2 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 2 பேரை கைது செய்தனர்;

Update:2022-10-21 00:15 IST

கடையநல்லூர்:

தென்காசி மாவட்டம் அச்சன்புதூர் அருகே நெடுவயல் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக அச்சன்புதூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் பேரில் இன்ஸ்பெக்டர் வேல்கனி மற்றும் போலீசார் கண்காணிப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்த நெடுவயல் பகுதியை சேர்ந்த மைதீன் மகன் அபுபக்கர் (வயது 24), அச்சன்புதூர் பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் சதீஷ் (19) ஆகிய 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.25 ஆயிரம் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. 2 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்


Tags:    

மேலும் செய்திகள்