மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேர் கைது
மோட்டார்சைக்கிள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்;
சிங்கம்புணரி
சிங்கம்புணரி அருகே மருதிபட்டி விளக்கு பகுதியில் எஸ்.வி.மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பீட்டர் அலங்கார தம்புராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை சந்தேகத்தின்பேரில் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் கண்டவராயன்பட்டியை சேர்ந்த அருண்குமார், காரையூர் வடக்கு தெருவை சேர்ந்த கார்த்திக் என்பதும், அவர்கள் வந்த மோட்டார்சைக்கிள் காளாப்பூரில் இருந்து திருடப்பட்டது என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமார், கார்த்திக் ஆகியோரை கைது செய்தனர்.